Movie Photos | Images | Wallpapers | Stills | Pictures | Posters Free Download

3 - Movie official release date by Dhanush

by Ninja Romeo

'3′ படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் நேற்று அறிவித்தார்.
இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கொலவெறி’ பாடல் உலகளவில் பிரபலமாகியுள்ளது.

அவருடைய டுவிட்டர் இணைய பக்கத்தில் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

வரும் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் ’3′ திரைப்படம் திரைக்கு வரும். மேலும் இப்படம் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். ஆங்கில சப்டைட்டிலுடன் அயல்நாடுகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.




Nayanthara leaves Prabhu Deva

by Ninja Romeo

எந்த வேகத்தில் பிரபுதேவா மீது காதலில் விழுந்தாரோ அதே வேகத்தில் அவரை விட்டுப் பிரிந்தும் விட்டார் நயனதாரா. இதனால் பிரபுதேவாவின் கதி என்ன என்பது திரையுலகினர் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

பிரபுதேவாவின் திருமண வாழ்க்கையே பெரும் மர்மக் கதையாகவே இருந்து வருகிறது. ரம்லத்தை அவர் திருமணம் செய்த ஸ்டைலும், அதை மறைத்து பல ஆண்டுகளாக வாழ்ந்த விதமும் அனைவராலும் மறக்க முடியாதது.

ரம்லத்துடன் அவர் கிட்டத்தட்ட ரகசிய வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார். இவர்தான் எனது மனைவி என்று அவர் வெகு காலமாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காரணம், பிரபுதேவாவின் குடும்பத்தார் இந்தத் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை என்பதால். இதனால் 3 குழந்தைகள் பிறந்து அவர்கள் ஓரளவுக்குப் பெரியவர்களாக ஆன பிறகும் கூட ரகசிய வாழ்ககைதான் வாழ்ந்து வந்தார் பிரபுதேவா.

இந்த நிலையில் பிரபுதேவா-ரம்லத் தம்பதியின் குழந்தை இறந்தபோது பெரும் சோகமடைந்தார் பிரபுதேவா. அந்த சோகத்தில் பங்கெடுக்க வந்தவர்தான் நயனதாரா. அப்போது அவரும் கூட சோகத்தில்தான் இருந்து வந்தார். சிம்புவிடமிருந்து பிரிந்த சோகம். இரண்டு சோகங்களும் ஒன்று கலக்கவே, அது அவர்களுக்கு சுகமாக தெரிந்தது- புதிய காதல் கதை பிறந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர் பிரபு தேவாவும் நயன்தாராவும். இந்தக் காதலுக்காக தனது மனைவியை கடுமையாக பிடிவாதம் பிடித்து விவாகரத்தும் செய்தார் பிரபுதேவா. தனது கணவரை தக்க வைக்க எப்படியெல்லாமோ முயற்சித்தார் ரம்லத். ஆனால் பாவம், அந்தப் பெண்ணின் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை. அவரும் கூட தனது மனதை தேற்றிக் கொண்டு கணவரை இன்னொரு பெண்ணுக்கு தாரை வார்த்துக் கொடுக்க நேரிட்டு விட்டது. இதனால் விவாகரத்து நடந்தது, பாகப்பிரிவினையும் நடந்து முடிந்தது.

அதன் பிறகு நடந்த அத்தனையுமே படு சுவாரஸ்யமானவை. பிரபுதேவாவை கல்யாணம் செய்வதற்காக மதம் மாறினார் நயனாரா. சினிமாவுக்கும் கூட முழுக்குப் போட்டார். சிம்பு மீண்டும் ஒருமுறை தனது படத்தில் ஆட வேண்டும் என்று வைத்த வேண்டுகோளையும் கூட நிராகரித்தார்.

தமிழில அவர் கடைசியாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்திருந்தார். அதேபோல தெலுங்கில், ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்தார்.

இத்தனையும் செய்து விட்டு பிரபுதேவாவிடம் கல்யாணம் என்று பேச்சை ஆரம்பித்த போதெல்லாம் அவர் பிடி கொடுக்கவே இல்லை. என்ன என்று ஆராய்ந்து பார்த்தபோதுதான், ரம்லத் மறறும் பிள்ளைகள் மீது இருந்த பாசத்தை பிரபுதேவாவால் விட முடியவில்லை என்பது.

நயனதாராவுக்கு தெரியாமல் ரகசியமாக தனது பிள்ளைகளைப் பார்த்து கொஞ்சி வந்தார் பிரபுதேவா. ரம்லத்தையும் கூட அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் நயனதாராவுக்குத் தெரிய வர ஷாக் ஆகி விட்டார். இதனால் இடையில் பிரபுதேவாவுடன் சண்டை போட்டு சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் விட்டார். இதையடுத்து அங்கு ஓடிய பிரபுதேவாவை' வீட்டுக்குள்ளேயே நயனதாரா சேர்க்கவில்லை. இதனால் தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இருப்பினும் இதெல்லாம் கப்சா, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, திருமண ஏற்பாடுகள் தீவிரமாகநடந்து வருவதாக பிரபுதேவா, நயனதாரா தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவருக்கும் இடையிலான பிளவு மிகப் பெரிதாகி விட்டதாகவும், இனிமேல் சேர முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிளவுக்கு நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் பிரபுதேவா நெருக்கம் காட்டியதும் ஒரு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் ரம்லத் மற்றும் பிள்ளைகள் மீதான பாசத்தை பிரபுதேவாவால் கைவிட முடியாமல் தவிப்பதால்தான் நயனதாரா பிரிந்து போய் விட்டதாக கூறப்படுகிறது.




Salman is elder than me so how I marry him - Asin

by Ninja Romeo

என்னை விட வயதில் ரொம்ப பெரியவர் சல்மான் மான். அவரை எப்படி நான் திருமணம் செய்ய முடியும் என்று சல்மான் கான் உடனான திருமண வதந்திக்கு பதிலளித்திருக்கிறார் நடிகை அசின். தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின், கஜினி மூலம் இந்திக்கு போனார். முதல்படமே சூப்பர் ஹிட்டாக அங்கேயே டேரா போட்டார். தொடர்ந்து சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ், ரெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் இந்தி படவுலகில் அவ்வப்போது அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜெனிலியா-ரித்தேஷ் திருமணத்தை தொடர்ந்து, சல்மான்கானுக்கும் அசினுக்கும் திருமணம் நடக்கப்போவதாக இந்தி பட உலகில் தகவல் பரவியிருக்கிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை அசின் பேட்டியளித்துள்ளார். அதில் சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சல்மான் கானும் ஒருவர். அவருக்கும் எனக்கும் காதல் ஏதும் கிடையாது. வெறும் நட்பு மட்டும் தான். நிச்சயமாக அவரை நான் திருமணம் செய்ய மாட்டேன். காரணம் அவர் என்னை விட வயதில் ரொம்ப பெரியவர். அதுமட்டுமல்ல நான் கேரளாவை சேர்ந்தவள். அங்குள்ள பழக்க வழக்கங்களை பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவள். எனவே எங்களது குடும்ப சம்பிரதாயப்படி தான் என்னுடைய திருமணம் நடக்கும். இப்போதைக்கு சினிமா மட்டும், திருமணத்திற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும்




Vadivelu's re-entry - Next plan

by Ninja Romeo

இந்திரலோகத்தில் அழகப்பன் பாக்ஸ் ஆஃபிஸில் தரை தட்டினாலும் ஹீரோ ஆசை இந்த‌க் காமெடியனுக்குள் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. தனது ‌ரீ எ‌ண்ட்‌ரி ஹ‌ீரோவாக இருக்க வேண்டும் என்பதில் வைராக்கியமே இருக்கிறது இவருக்கு.

இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகு காமெடியனாக ஒரு படத்தில் தோன்றுவதைவிட ஹீரோவாக அடி பின்னலாம் என்ற கணக்கில் ஒரு கதையை ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கிறார். அரசியல் வானம் தெ‌ளிந்த பிறகு சமாதானக் கொடியுடன் படப்பிடிப்பை தொடங்குவதாக திட்டம்.

விரைவில் சமாதான உடன்படிக்கையுடன் வடிவேலு ஹீரோ வேஷம் கட்டுவதை காணலாம




SAFE - Movie Poster

by Ninja Romeo

Safe - movie poster | Safe - movie photos / wallpapers / images / reviews / releasing date | Safe - movie Pictures free download



 

All Rights Reserved by Ninja Romeo | Ninja Romeo pix | Ninja Romeo trend